விஜய் சேதுபதிக்காக ஸ்ருதிஹாசன் பாடிய “கன்னக்குழிக்காரா”
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்பு மட்டுமல்லாமல் தன் இசையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பம்சமாக, இயக்குநர் மிஷ்கின், தானே இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.