கனகவல்லியாக கலக்கும் அன்னா பென்

கனகவல்லியாக கலக்கும் அன்னா பென்
மலையாளத் திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி. நாயரம் பலத்தின் மகளான அன்னா பென், 2019 ஆம் ஆண்டில் கும்பளங்கி நைட்ஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். அந்தப் படங்களுக்காக கேரள அரசின் விருதையும் பெற்றார். அதே போல் தமிழில் சூரி நடிப்பில் வெளியான கொட்டு காளி படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். அதோடு தெலுங்கில் பிரபாஸ் நடித்த
கல்கி படத்திலும் நடித்துள்ளார். தனது கேரக்டரை சிறப்பாக நடிக்கும் திறமை கொண்ட அன்னா பென், மீண்டும் தமிழில் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில் கனகவல்லி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். நேற்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment