கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருது
‘தெலுங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்தியத் திரையுலகில் 60ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் அவரின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கமலுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார். விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி நாகார்ஜுனா உட்பட பலர் பங்கேற்றனர்.