‘காளிதாஸ் 2’ பட ரிலீஸ் தேதி
2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து,அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ தற்போது உருவாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்தில் இதையும் இயக்கியுள்ளார். பரத் ஹீரோவாக நடித்த, 2-வது ஹீரோவாக அஜய் கார்த்தி நடித்துள்ளார். ‘பூவே உனக்காக’ சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு இதில் நடித்துள்ளதன் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார். மேலும் பவானி ஸ்ரீ, அபர்ணதி ஆகியோரும் நடித்துள்ளனர்.முதல் பாகத்தை போல இதுவும் உணர்ச்சிகரமான அதே சமயம் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பைவ் ஸ்டார் செந்தில் மற்றும் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர்.