காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் ரிலீஸ்
சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை சொல்லும் ‘தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர் வெளி யாகியுள்ளது.காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடித்துள்ளார். இப்படத்திற்கு சாகர் பி.ஷிண்டே கதை எழுத சேட்டன் டிகே இயக்கியுள்ளார்.ஜீ ஸ்டுடியோ மற்றும் எம் எல் ஜி புரடக்ஷன் அண்டு ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் ஜூலை 24,அன்று தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.