காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி பட டீசர்
சாகர் பி ஷிண்டே எழுதித் தயரிக்க,சேத்த டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள படம் தி இந்தியா ஸ்டோரி. மேலும் இதில் ஷ்ரேயாஸ் தல்படே, த்ரிஷா சர்தா, முரளி சர்மா, மனீஷ் வத்வா, அதுல் திவாரி, கமலேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. மும்பையைச் சேர்ந்த நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் பழனி, துப்பாக்கி , ஜில்லா, மெர்சல் இந்தியன் 2, இந்தியன் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியில் ராமாயணா படத்திலும் நடித்துள்ள காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரிஸ் படம் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.