டைவர்ஸ் குறித்து காஜல் அகர்வால் அதிரடி..

டைவர்ஸ் குறித்து காஜல் அகர்வால் அதிரடி..
சமீபகாலமாக அதிகரிக்கும் விவாகரத்துகள் குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்திய உரையாடலில் பேசிய அவர், சகிப்புத் தன்மையின்மை மற்றும் அளவுக்கு அதிகமான சமூக வலைதள பயன்பாடே அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.பல தம்பதிகள் ஹோட்டலுக்கு செல்லும்போது கூட, ஒருவருக்கொருவர் பேசி நேரத்தைச் செலவிடுவதை விடத் தங்கள் செல்போன்களிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்களால் மக்களின் கவனம் திசை திருப்பப்படுவதால், அர்த்தமுள்ள உரையாடல்கள் படிப்படியாகக் குறைந்து வருவதாக காஜல் அகர்வால் கூறினார். அவரின் இந்தக் கருத்துக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment