மாலத்தீவில் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால்
பாலிவுட் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரைப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான்கான் உடன் நடித்தார். அதேபோல் வரும் 27 ஆம் தேதி விஷ்ணு மஞ்சு இயக்கத்தில் வெளியாக உள்ள கண்ணப்பா’ படத்தில் பார்வதி தேவியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் தனது 40-வது பிறந்தநாளை சமீபத்தில் மாலத்தீவில் குடும்பத்துடன் கொண்டாடினார்.கடற்கரை பகுதியில் கணவர்,மகனுடன் ஹாயாக நடந்து செல்வதும்,பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோக்களை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.