ஜோதிகாவுக்கு ஐ கானிக் கோல்ட் விருது
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் ஜோதிகா, சோனாக்சி சின்கா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் சிஸ்டம். தன் குடும்பத்தை பாதுகாக்க போராடும் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணின் தைரியமான மற்றும் கண்ணியமான கேரக்டரை படத்தில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக ஜோதிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது. இதை தொடர்ந்து ஜோதிகா 2026-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஐ கானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருதை பெற்றுள்ளார். ஏற்கனவே திரை உலகில் பல சாதனை படைத்துள்ள அவருக்கு இந்த விருது மேலும் பெருமையை சேர்த்துள்ளது.மொழி எல்லைகளை தாண்டி, தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் புதிய கதைக்களத்தில் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முக்கிய கேரக்டராக அமைய வேண்டும் என்பதில் ஜோதிகா உறுதியாக இருந்து
வருகிறார்.