டோலிவுட்டில் ஹீரோயினாகும் ஜோவிகா

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கியுள்ள படம்’ மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இந்த படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். படத்தின் ஹீரோவாக ராபர்ட் மாஸ்டர் நடிக்கிறார். மேலும் கிரண், ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஆர்த்தி, கணேஷ், உட்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் வனிதாபேசியது, இந்தப் படத்தின் மூலம் என் மகள் ஜோவிகா தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதோடு தெலுங்கில் 2 படங்களில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.அதற்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. ஜூன் மாதம் முதல் ஷூட்டிங் துவங்க இருக்கிறது. எம் எஸ் ராஜு படத்தை இயக்க உள்ளார் என்றார்.

Comments (0)
Add Comment