என்ஐஏ அதிகாரியாக நடிக்கும் ஜெயசூர்யா
அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகா இயக்கத்தில், நடிகர் ஜெயசூர்யா என்ஐஏ அதிகாரியாக நடித்துள்ள படம் ’ஆபரேஷன் டிரால்’. இப்படத்தை குட்வில் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் தயாரித்துள் ளது.பான் இந்தியன் இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்ஷன் த்ரில்லரான உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை மையமாக க் கொண்ட பரபரப்பான விசாரணைக் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.