ஜான்வியின் பரமசுந்தரி-க்கு சிக்கல்

ஜான்வியின் பரமசுந்தரி-க்கு சிக்கல்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்விகபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பரமசுந்தரி’ இதில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. டிரெய்லர் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ள நிலையில், கிறிஸ்தவ அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம், டிரெய்லரில் சித்தார்த்தும், ஜான்விகபூரும் சர்ச்சில் காதல் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால்
அந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் அமைப்பு சார்பில் மும்பை போலீஸ் மற்றும் சென்சார் போர்டில் புகார் மனுவை அளித்துள்ளனர்.

Comments (0)
Add Comment