ஜனநாயகனுக்கு கிடைத்தது சென்சார்; வரும் 24ஆம் தேதி ரிலீஸ்?

ஜனநாயகனுக்கு கிடைத்தது சென்சார்; வரும் 24ஆம் தேதி ரிலீஸ்?
விஜய் நடிப்பில் எச் வினோத் இயக்கிய படம் ‘ஜன நாயகன்’.இப்படம் கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது ஏழு மாத கால போராட்டத்திற்கு பிறகு, இப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’சான்றிதழை வழங்கி உள்ளது. இருப்பினும், விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் (டிவிகே) தொடர்பான குறிப்புகள், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இடம்பெறும் காட்சிகள், இந்திய தேசிய கொடி மற்றும் பல வசனங்கள் நீக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படம் வரும் 24 அன்று ஒரே நேரத்தில் உலகெங்கும் வெளியாகும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு முன்பு விஜய் நடித்த கடைசி படம் தற்போது தேர்தல் முடிந்து அவர் முதல்வரான பிறகு வெளியாவதால் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Comments (0)
Add Comment