விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் கிளிம்ஸ்

விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் கிளிம்ஸ்
நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி டியோலும் நடிக்கின்னர். மேலும் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி, ரேவதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 22 ஆம் தேதி ஜன நாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிறந்தநாளில் கோட் படத்தில் கிளிம்ஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment