ஜெய்லர் 2 ஷூட்டிங்: கேரளா செல்லும் ரஜினி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வருகிற 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. நேற்று இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்ட முறையில் நடைபெற்றது.இந்த நிலையில் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், தற்போது கூலி படத்தின் பிரமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளார். அடுத்த வாரத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரளா புறப்பட்டு செல்கிறார். அதனால் கூலி படம் வெளியாகும் போது கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினி இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.