ஜெய், மீனாட்சி ரொமான்ஸ் டூயட்
இயக்குனர் பாபு விஜய் இயக்கத்தில், ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. இதில் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமை த்துள்ளார். பி வி பிரேம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 2வது பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது. அழகான ரொமான்டிக் மெலோடியாக உருவாகியுள்ள இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தற்போது இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.