ஹீரோ-வில்லன் கேரக்டரில் கலக்கும் ஜே.டி.சக்ரவர்த்தி

ஹீரோ-வில்லன் கேரக்டரில் கலக்கும் ஜே.டி.சக்ரவர்த்தி
சூர்யாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘சூனியம்’.இதில் லீடு ரோலில் ஜே.டி.சக்ரவர் த்தி நடிக்கிறார். எம்.3 மீடியா மற்றும் மகா மூவிஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார்.ஆஸ்கார் விருது பெற்ற சந்திர போஸ் பாடல்களை எழுதி உள்ளார். ஜே.டி.சக்ரவர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் பற்றிய விவரங்களை படக்குழு வெளியிட்டு ள்ளது. இதில் ஹீரோ,வில்லன் என டபுள் ஆக்ஷனில் அவர் நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பே 5 மொழிகளுக்கான ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் பெற்று உள்ளது. திகில் மற்றும் மர்மம் என உண்மை சம்பவங்களை ஆதாரமாக கொண்டு படம் உருவாகிறது.

Comments (0)
Add Comment