ஹீரோவாக பத்து வருஷம் ஆச்சு: நடிகர் லிங்கா பேச்சு

ஹீரோவாக பத்து வருஷம் ஆச்சு: நடிகர் லிங்கா பேச்சு
அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் இயக்க, லிங்கா ஹீரோவாக நடித்துள்ள படம் தாவுத். இதில் சாரா ஆச்சர் ஹீரோயினாக நடித்துள்ளார். ட்ரோம் புரொடக்ஷன் ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் உமா மகேஸ்வரி தயாரித்துள்ள இப்படம் வரும் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.அடிதடி வெட்டு குத்துச் சண்டைக் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் ராதாரவி, வையாபுரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் லிங்கா பேசியது,சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் நான் நடித்த முதல் படம், அது வெளியாகி 10 வருடம் ஆகிறது. இப்போது ஹீரோவாக முதல் படம். 10 வருடம் முயற்சிக்கு பிறகு ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Comments (0)
Add Comment