மகனைப் பார்த்தால் பயமாக இருக்கிறது: விஜய் சேதுபதி
அனல் அரசு இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பீனிக்ஸ் விழான்’. இதில்
வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, அபிநட்சத்திரா ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். ஜூலை
4-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியது, இந்த படத்தின் கதையை அவனே கேட்டு, ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தான். டிரெய்லரை பார்க்கும் போது படம் நிச்சயம் நன்றாக
இருக்கும் என தெரிகிறது.என் பையனை பள்ளியில்
சேர்க்கும் போது எப்படி படபடப்பாக
இருந்ததோ, அதுபோல் அவன் சினிமாவில் நடிக்க தொடங்கிய போது பயமாக இருக்கிறது என கூறினார்.