கைதி படத்தின் தாக்கமா அக்யூஸ்ட்
ஜேய்சன் சினிமா தயாரிப்பில், பிரபு சீனிவாஸ் இயக்கத்தில், உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விக்கா சாந்திகா நடிப்பில் கடந்த 1-ம் தேதி ரிலீஸ் ஆகி உள்ள அக்யூஸ்ட் படம் கலவையான விமர்சனங்களுடன் கைதி படத்தின் தாக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.கொலை குற்றவாளியான உதயாவை புழல் சிறையில் இருந்து சேலத்திற்கு போலீஸ் கான்ஸ்டபிள் அஜ்மல் அழைத்து செல்கிறார். அவரை வழியில் தீர்த்து கட்ட ரவுடி கும்பலும்,என் கவுண்டர் செய்ய போலீசும் திட்டமிடுகிறது. இதிலிருந்து உதயாவை அஜ்மல் எப்படி காப்பாற்றினார் என்பதை தான் இயக்குனர் இதில் சொல்லி உள்ளார். படத்திற்க்கு மருதநாயகன் ஒளிப்பதிவு செய்ய,நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார்.