தனுஷ் மிருணாள் தாக்கூர் காதலா?

தனுஷ் மிருணாள் தாக்கூர் காதலா?
சமீபத்தில் மும்பையில் நடந்த நடிகை மிருணாள் தாக்கூர் பிறந்தநாள் பாட்டியில் நடிகர் தனுஷ் பங்கேற்றார். அதன் பிறகு அஜய் தேவ்கன்- மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான சன் ஆப் சர்தார் படத்தின் பிரிமியர் காட்சியிலும் தனுஷ் பங்கேற்றார். இந்த நிலையில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததையொட்டி மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் தனுசுடன் மிருணாள் தாக்கூர் பங்கேற்றது பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தொடர்ந்து இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து இருவரும் எந்த வித மறுப்பும் வெளியிடவில்லை.

Comments (0)
Add Comment