சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’

சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரித்து நடித்துள்ள படம் ‘இரவின் விழிகள்’.இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நீமா ரே நடித்திருக்கிறார். மேலும் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சோசியல் மீடியாவை வைத்து வித்தியாசமான கதை அம்சத்துடன் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ திரில்லர் ஜானரில் இது உருவாகியுள்ளது. யு/ஏ சான்று பெற்றுள்ள இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

Comments (0)
Add Comment