சின்னத்திரை நடிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

சின்னத்திரை நடிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் பரத், செயலாளர் நவிந்தர், பொருளாளர் கற்பகவல்லி மற்றும் நிர்வாகிகள் வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர், ரஞ்சன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், எம்எல்ஏகள் கணபதி, பிரபாகர ராஜா, நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர்,இயக்குநர் பேரரசு,பெப்சி தலைவர் செல்வமணி, மங்கை அரிராஜன், ஜாக்குவார் தங்கம், சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments (0)
Add Comment