அஜித் குறித்து ரோஜா சொன்ன சுவாரஸ்ய தகவல்

அஜித் குறித்து ரோஜா சொன்ன சுவாரஸ்ய தகவல்
விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான படம் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’.இதில் கார்த்திக், அஜித், ரோஜா ஆகியோர் நடித்திருந்தனர். அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்து ரோஜா கூறியது, இந்த படத்தில் நானும் அஜித்தும் நடித்துக் கொண்டிருந்த போது ‘வாலி’ படம் வெளிவரவில்லை. அந்த நேரத்தில் அஜித் என் ரசிகர். நான் கார்த்திக்கின் ரசிகை. படப்பிடிப்பில் அஜித் நல்ல நண்பராகி விட்டார். படப்பிடிப்பு தளத்தில் அஜித் விதவிதமாக சமைத்து கொடுக்க நாங்கள் நன்றாக சாப்பிட்டோம்.எனக்கு சிக்கன், மீன் பிடிக்கும். அதனால் சிக்கன் டிஷ், மீன் டிஷ் செய்து கொடுத்தார் என்றார்.

Comments (0)
Add Comment