அரசியல் காமெடி கதையில் ராதாரவி, ரவி மரியா
ராம்தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் லீட் ரோலில் ராதாரவி மற்றும் ரவி மரியா நடிக்கின்றனர். மேலும் கஞ்சா கருப்பு, இயக்குனர் பேரரசு,நிழல்கள் ரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் பற்றி இயக்குனர் ராம்தேவ் பேசுகையில், ராதா ரவி மற்றும் ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக திரையில் தோன்றி அரசியல் காமெடி தர்பார் நடத்த உள்ளனர். சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.ரவி மரியாவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் கதாநாயகி தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து,2-ம் கட்ட சூட் இந்த வாரம் தேனியில் தொடங்குகிறது என்றார்.