பங்கி பட கதையிலும் கயாடு தான் ஹீரோயின்

பங்கி பட கதையிலும் கயாடு தான் ஹீரோயின்
டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை கயாடு லோஹர், தற்போது பங்கி என்ற காமெடி படத்தில் நடித்துள்ளார். இதில் ஹீரோவாக நடிகர் விஸ்வக்சென் நடிக்கிறார். இதில் இவர் இயக்குனர் கேரக்டரில் நடிக்க, கயாடு ஹீரோயின் கேரக்டரில் நடித்துள்ளார்.

இயக்குனர் கே.வி. அனுதீப் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். ‘பங்கி’ படத்தை கோடை விருந்தாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது முன்கூட்டியே பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ’தீரே தீரே’ பாடல் வெளியாகி இருக்கிறது.

Comments (0)
Add Comment