ஒரே படத்தில் அப்பா, மகன் அறிமுகமாகும் அந்த ஏழு நாட்கள்’

ஒரே படத்தில் அப்பா, மகன் அறிமுகமாகும் அந்த ஏழு நாட்கள்’
பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த சுந்தர் இயக்கியுள்ள படம் ‘அந்த ஏழு நாட்கள்’ இது இவரின் முதல் படம். இதில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகின்றனர். அதோடு இயக்குனர் சுந்தரின் மகன் சச்சின் சுந்தர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இதில் பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தை பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார். காதல் கலந்த பேண்டஸி படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Comments (0)
Add Comment