காந்தாராவில் ‘கனகவதியாக கலக்கும் ருக்மணி வசந்த்
காந்தாரா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி அதன் அடுத்த பாகமான காந்தாரா அத்தியாயம் 1 படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் வரமஹாலக்ஷ்மி திருநாளை முன்னிட்டு படத்தின் கதாநாயகியான ருக்மிணி வசந்தின் ‘கனகவதி’ கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. மகாராணி கெட்டப்பில் ருக்மிணி வசந்தி தோன்றுகிறார். இவர் தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள மதராசி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.