மகிழ்ச்சியில் குஷ்பூ
மணிரத்னம் இயக்கத்தில்
கமல் நடிப்பில் வெளியாகி உள்ள
தக்லைப் படத்தில் நடிகை குஷ்பு, இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அனந்திகா உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பட டைட்டிலில் அவர் பெயரும் வந்ததை பார்த்து குஷ்பூ பேரானந்தம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணிரத்னத்துக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். அதே போல் இயக்குனர் சுந்தர் சி யும் தனது மகளை கட்டித்தழுவி முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். குஷ்பு குடும்பத்திலிருந்து அடுத்த இயக்குனர் ரெடியாகிவிட்டார் என கோடம்பாக்கம் பேசத் தொடங்கிவிட்டது.