திருமணத்தின் மீது எனக்கு ஆர்வமில்லை: ஸ்ருதி ஹாசன் அதிரடி

திருமணத்தின் மீது எனக்கு ஆர்வமில்லை: ஸ்ருதி ஹாசன் அதிரடி
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,”ஒருமுறை நான் திருமணத்தின் மிக நெருங்கிய கட்டம் வரை சென்றுவிட்டேன். அந்த அனுபவம் எனக்கு எந்தவித பயத்தையும் தரவில்லை. ஒரு துணையுடன் வாழ்வதும், தினமும் ஒருவரையொருவர் நேசிப்பதும் தான் முக்கியம். அதற்கு, திருமணத்திற்கான சட்டப்பூர்வமான ஆவணங்கள் என்பது அவசியமில்லை. திருமணத்தின் மீது எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால், தாய்மை அடைவதில் அதிக ஆர்வம் இருக்கிறது. எதிர்காலத்தில், குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது அல்லது உயிரியல் ரீதியாகத் தாயாவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ”திருமண விழாக்களுக்குச் செய்யப்படும் அநியாயமான செலவுகள் மற்றும் ஆடம்பர கொண்டாட்டங்கள் தேவையற்றவை எனக் கருதுகிறேன். யாரை திருப்திப்படுத்த இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்கிறோம் எனத் தெரியவில்லை. ஆடம்பரமாகச் செலவு செய்து திருமணம் செய்பவர்களை நான் குறை சொல்ல வில்லை. ஆனால், அந்த பணத்தை ஆதரவற்ற தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார். திருமணம் மற்றும் தாய்மை குறித்து ஸ்ருதிஹாசன் பேசியுள்ள இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment