காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் தெரிஞ்சா காதலிங்க
அக்ரிலேண்ட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கஜேந்திரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “தெரிஞ்சா காதலிங்க”. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இதில் கிரண், விபின்,சாதுல்பிரான் ஹீரோவாகவும்,அஜன்யா,ஆதிரா, தீபா ஆண்டனி மூவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கோல்டு சந்துரு ஒளிப்பதிவு செய்ய, சி.எம்.மகேந்திரா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பெரும் பகுதி தேனி, வருஷநாடு, அறியாமான் பீட்ச், தேவிப்பட்டினம், முடிவீரன்பட்டினம் பீட்ச் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு முக்கோண காதல் கதையாக உருவான இந்த படம் காதலர் தினத்தை ஒட்டி இன்று 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது.