தாய் கிழவி கேரக்டருக்கு ராதிகாவை விட்டால் வேறு ஆள் கிடையாது: எஸ்கே

தாய் கிழவி கேரக்டருக்கு ராதிகாவை விட்டால் வேறு ஆள் கிடையாது: எஸ்கே
அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. வரும் 27-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தை எஸ் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் பேசியது, இந்த கதையை தயாரித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற படங்களை எடுக்கவே நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன். இந்தியா முழுவதும் தேடினாலும் இந்த கேரக்டரில் நடிக்க ராதிகாவை விட்டால் வேறு ஆள் கிடையாது. படத்தை பார்த்த கமல் சார் இதில் பல நட்சத்திரங்களை இயக்குனர் சிவகுமார் முருகேசன் உருவாக்கி இருப்பதாக பாராட்டினார். அவருக்கு திரவலைகள் பெரிய எதிர்காலம் உள்ளது என்றார்.

Comments (0)
Add Comment