விஷ்ணு விஷால் உடன் குஸ்தியை தொடரும் ஐஸ்வர்யா லட்சுமியின் ஜில் பேட்டி

விஷ்ணு விஷால் உடன் குஸ்தியை தொடரும் ஐஸ்வர்யா லட்சுமியின் ஜில் பேட்டி

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி
நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் கட்டா குஸ்தி’m. இந்தப்
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் கட்டா குஸ்தி 2 என்ற பெயரில் தயாராகியுள்ளது. செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், முனீஸ் காந்த், காளி வெங்கட் ஆகியோருடன் கருணாகரன் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஜூலை மாதம் 3-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் குறித்து ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: முதல் பாகத்தை போன்று இதிலும் நீங்கள் குஸ்தி வீராங்கனையா?

பதில்: ஆமாம், இந்த படத்திலும் குஸ்தி வீராங்கனையாக நடித்து இருக்கிறேன். ஆனால் ஃபர்ஸ்ட் பார்ட்டை போல எனக்கு கணவராக நடிக்கும் விஷ்ணு விஷால் முரண்டு பிடிக்காமல், குஸ்தி
வீராங்கனையான பொண்டாட்டிக்காக
‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ ஆக மாறியுள்ளார்.

கேள்வி: இந்த கேரக்டருக்காக ஏதாவது சிறப்பு பயிற்சி எடுத்தீர்களா?

பதில்: எஸ், முதல் பாகத்திலேயே ஷூட்டிங் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாக குஸ்தி மாஸ்டர் ஒருவரிடம் பயிற்சி பெற்ற பிறகு தான் படத்தில் நடித்தேன். அதேபோல் இந்த படத்திலும் பயிற்சி எடுத்த பின்பு தான் ஷூட்டிங்கில் பங்கேற்றேன். ஆனால் இந்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமா இல்ல ஃபேமிலி டிராமா, ஃபர்ஸ்ட் பாட்டை விட இதில் ஆக்ஷன் சீக்குவன்ஸ் அதிகம். அதேநேரம் எமோஷன் சீக்குவன்ஸ்சும் இருக்கும்.

கேள்வி: இது பெண்களுக்கு முன்னேற்றம் தரும் கதையாக பார்க்கலாமா?
பதில்: பெண்களுக்கான பாசிட்டிவிட்டி மட்டுமல்ல, குடும்பத்துக்கான முன்னேற்றம் தரும் கதையாகத்தான் பார்க்கிறேன். இதில் பெண்கள் முன்னேற்றம், கணவன்-மனைவி இடையிலான அன்பு, அப்பா-மகள் இடையிலான பாசப்பிணைப்பு, குடும்பத்தை வழிநடத்தும் விதம் ஆகியவற்றை பற்றி பேசி இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக இந்த படத்தை ஃபேமிலி எம்ப்பவர்மெண்ட் என்று சொல்லலாம்.

கேள்வி: நீங்கள் இருந்தாலே அந்த படம் ஹிட் ஆகிறது, அதற்கு காரணம் உங்கள் பெயரிலேயே ஐஸ்வரியமும் லட்சுமியும் இருப்பதால்தானோ?

பதில்: தேங்க்யூ சார். நீங்களே ஸ்டேட்மெண்டாக எனது பதிலை சொல்லி விட்டீர்கள். ஆனால் படங்கள் வெற்றி அடைவது இயக்குனரின் கதையை வைத்து தான். அந்தக் கதையில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. இருப்பினும் என்னுடைய படங்கள் வெற்றியடைவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

பாக்ஸ்

விமர்சனம் பற்றி கவலை இல்லை…

மாமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த போதும், கட்டா குஸ்தியில் நடித்த போதும் விமர்சனங்கள் வந்தன. ஆனால் எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. விமன் சென்ட்ரிக் கதைகள் ஆனாலும் சரி, கேரக்டர் ஆர்டிஸ்ட் என்றாலும் சரி. படத்தில் எனது கேரக்டர் எப்படி உள்ளது. அதில் எப்படி ஜெயிக்கலாம் என்பது பற்றி மட்டுமே நான் பார்ப்பேன்.

Comments (0)
Add Comment