2026ல் பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விட்ட அப்பா-மகன்
தெலுங்கு திரை உலகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா- மகனான சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இருவரும் இந்த 2026ம் ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூலை கொடுத்து சாதனையாளராக மாறியுள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு படம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. தற்போது சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அந்த சாதனையை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளார். அவரது நடிப்பில் கடந்த 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ படம் பெரிய வசூலை குவித்து வருகிறது.’மன சங்கர வர பிரசாத் காரு’ பட வசூலை முறியடித்தது. 2026 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் வெளியான படங்களில் அதிக வசூலைரூ.400 கோடி செய்து , பாக்ஸ் ஆபீஸ் சாம்பியனாக உருவெடுத்துள்ளது.