100 கோடி கிளப்பில் சமந்தா
சமந்தா தயாரித்து கதாநாயகியாக நடித்த ‘மா இன்டி பங்காரம்’ படம் கடந்த ஜூன் 19-ந்தேதி ரிலீஸ் ஆனது. விமல் சென்ரிக் கதையான இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது. ஆக்சன், காமெடி எண்டர்டெயினராக வந்த இந்த படம் தற்போது ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஒரு பெண் கதாநாயகியை மையமாக
கொண்டு வெளிவந்து ரூ.100 கோடி வசூலை பெற்ற முதல் படம் என்ற பெருமையை சமந்தா நடித்த ‘மா இன்டி பங்காரம்’ பெற்றுள்ளது. இந்த தகவலை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.