போங்கு இயக்குனரின் அடுத்த படம்
டாம்ஸ் கன்சல்டன்சி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய படம் துவங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 2017ல் வெளியான போங்கு என்ற படத்தை இயக்கிய இயக்குநர் தாஜ் இயக்குகிறார்.மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும், தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படத்தில் தமிழ்வாணன் கதைநாயகனாக நடிக்க,அபிராமி நாயகியாக நடிக்கிறார். மேலும் சிஎஸ்கே சரவணன், பிக் பாஸ் பிரவீன், ஜெய் பீம் மொசக்குட்டி, அகத்தியன், விஜயலட்சுமி, அருணாச்சலம்,லயன் சுரேஷ், மைக்கேல், ஸ்ரீராம் மற்றும் கௌசல்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய, ஜோன்ஸ் ரூபட் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிகிறது.