27ல் இட்லி கடை ஃபஸ்ட் சிங்கிள்
குபேர படத்துக்கு பிறகு தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை .இதில் ஹீரோயின் ஆக நித்யா மேனன் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வொண்டர் பார் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தது. அதோடு ரிலீஸ் தேதியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இப்படம் வரும்
அக்டோபர் 2-ந்தேதி ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளனர். இந்த நிலையில்
படத்தின் முதல் பாடல் வருகிற 27-ந்தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.