இதயம் முரளி விமர்சனம்
பள்ளிப் பருவத்தில் பிரீத்தி முகுந்தனையும், கல்லூரி நாட்களில் கயாடு லோகரையும் ஒருதலையாக காதலிக்கிறார் அதர்வா. ஆனால், இருவரிடமும் தனது காதலை சொல்லாமல் காலம் கடத்துகிறார்.சில ஆண்டுகளுக்குப் பிறகு நண்பரின் திருமணத்தில் மீண்டும் அந்த இருவரையும் சந்திக்கும் போது என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. இளம் தலைமுறையின் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை, நட்பு, காதல், தயக்கம், ஏக்கம் என அனைத்து உணர்வு களையும் யூத் ஃபுல்லாக சொல்லி உள்ளார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். இருப்பினும் இந்த ஜென் சி லவ் உடன் சிங்க் ஆகவில்லை. இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோவாக அதர்வா இருக்கிறார். இருப்பினும் அவரது அப்பா முரளி அளவுக்கு எமோஷன் காட்ட வில்லை. பிரீத்தி முகுந்தன் தனது அழகு இயல்பான நடிப்பால் கவர்கிறார். குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் கயாடு லோகரின் கதாபாத்திரம் மனதில் பதிகிறது. ‘பரிதாபங்கள்’ சுதாகர் மற்றும் டிராவிட், தமன், நிஹாரிகா, ரக்ஷன், ஏஞ்சலின்,நட்டி உள்ளிட் டோரின் நடிப்பு படத்திற்கு பலம்.மனோஜ் பரமஹம்சா வின் ஒளிப்பதிவு மற்றும் தமனின் இசை ரசிக்க வைக்கிறது.