துணிந்து ரிஸ்க் எடுத்தேன்: ராஷ்மிகா

துணிந்து ரிஸ்க் எடுத்தேன்: ராஷ்மிகா
ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மைசா”.இதில் பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா நடித்துள்ளார். அதோடு படத்தில் பைக் சேசிங், அண்டர் வாட்டர், ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் என ஆக்ஷனிலும் அசத்தி உள்ளார். நவம்பர் 27ல் ரிலீஸாக உள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில் படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா கூறுகையில், ‛‛இந்த படத்தில் ரிஸ்க்கான பல காட்சிகளில் நடித்திருக்கிறேன். குறிப்பாக நீருக்கடியில் நடக்கும் ஒரு பிரமாண்ட சண்டைக் காட்சிக் காக 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்கணும். அப்போது நான் பயந்து விட்டேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் அதை செய்வது கடினமாக இருந்தது. இருப்பினும் அந்தக்காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்து துணிந்து செய்தேன் என்றார்.

Comments (0)
Add Comment