நான் ஹீரோவாஜெயிச்சுட்டேன் ஆனா படம் ? கே ஜே ஆர் ஓபன் டாக்

 நான் ஹீரோவாஜெயிச்சுட்டேன் ஆனா படம் ? கே ஜே ஆர் ஓபன் டாக்

அறம், ஹீரோ, டாக்டர் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜெ.ராஜேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் அங்கீகாரம். ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா காஷ்யப், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் தென்பாதியான் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 26ஆம் தேதி வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது அதனை கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் நடிகர் கே.ஜெ.ராஜேஷ் பேசியதாவது, “முதலில், மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யூடியூப் சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் என அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது.அறம், ஹீரோ, டாக்டர் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜெ.ராஜேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் அங்கீகாரம். ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா காஷ்யப், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் தென்பாதியான் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இப்படம் கடந்த 26ஆம் தேதி வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது அதனை கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் நடிகர் கே.ஜெ.ராஜேஷ் பேசியதாவது, “முதலில், மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யூடியூப் சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் என அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது.இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை மீடியம் தான். ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை அதனால் இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என்றார். இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் நான் இந்த தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பேன். கைவிட மாட்டேன். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் உட்பட அனைவருக்கும் நன்றி உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

பாக்ஸ்
இதுதான் இண்டஸ்ட்ரி!!!
எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதை எடுத்திருக்கலாம் வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள்.

Comments (0)
Add Comment