சூர்யாவை ரொம்ப மிஸ் பண்றேன்: மமிதா பைஜூ

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா,மமீதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ நடிப்பில் கடந்த 14-ந் தேதி திரைக்கு வந்த படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம் ரிலீஸ் ஆகி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதோடு கடந்த ஐந்து நாட்களில் இப்படம் 150 கோடி வசூலையும் குவித்துள்ளது.இதையொட்டி படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் வெங்கி அட்லுாரி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் மமிதா பைஜூ, பவானிஸ்ரீ, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மமிதா பைஜூ பேசியது,சூர்யா சாரை ரொம்ப மிஸ் பண்றேன். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இதுவரைபடத்தை பார்க்காதவர்கள் திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது ஒரு மன நிறைவு ஏற்படும்” என்றார்.

Comments (0)
Add Comment