திருமணம் செய்து செட்டில் ஆக விரும்பவில்லை: நித்யா மேனன்

திருமணம் செய்து செட்டில் ஆக விரும்பவில்லை: நித்யா மேனன்
முன்னணி நடிகையான நித்யா மேனனுக்கு 37 வயதான நிலையில் பின்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவரைப்பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,என் வாழ்க்கையில் திருமணம் என்பது மைல்கல் அல்ல. உடனே திருமணம் செய்து கொண்டு விரைவில்
செட்டிலாக விரும்பவில்லை. திருமணம் செய்தாலும், செய்யா விட்டாலும் வாழ்க்கை அழகாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று யாரும் முடிவு செய்ய கூடாது .நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதற்கு என் குடும்பத்தினர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளனர் என்றார்.

Comments (0)
Add Comment