என்னால் காத்திருக்க முடியாது; ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்

என்னால் காத்திருக்க முடியாது; ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்
தெலுங்கு இயக்குனர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவராகொண்ட நடத்துள்ள கிங்டம் படம் இன்று 31ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிக்காக சென்னை வந்த விஜய் தேவார கொண்டா, என் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறார்கள். இந்த படத்துக்கும் அது தொடர வேண்டும் என்றார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில், 31-ந் தேதிக்காக என்னால் இப்போது காத்திருக்க முடியாது. நீங்கள் மூவரும் மேதைகள். விஜய் தேவரகொண்டா, கவுதம், அனிருத் நீங்கள் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய படத்தை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment