நானி படத்தில் ஹாலிவுட் நடிகர்

நானி படத்தில் ஹாலிவுட் நடிகர்
தெலுங்கு நடிகர் நானி தற்போது கனவு “தி பாரடைஸ்” படத்தில் நடித்து வருகிறார். இதை, தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க,எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரை படத்தில் இணைத்து, சர்வதேச மொழி பதிப்புகளை உலகம் முழுவதும் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதேபோல் இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ராகவ் ஜுயால், டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.படத்தின் ஒளிப்பதிவை சாய் மேற்கொள்ள,அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி 8 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

Comments (0)
Add Comment