ஹார்டின் -விமர்சனம்
ராஜஸ்தானில் ஓட்டல் நடத்தும் சனந்துடன் நட்பாகிறார், ஐ.டி. ஊழியரான இமயா. அதன் பின்னர் அவரிடம் காதலை சொல்லும் போது அவரின் முந்தைய காதலியான மடோனா செபஸ்டியன் பிரிவு பற்றி தெரியவருகிறது. ஆனாலும் எல்லாவற்றையும் மறந்து, சனந்த், இமயா காதலிக்க தொடங்குகிறார்கள். இருவீட்டாரும் நெருக்கமாகி, திருமண ஏற்பாடுகள் நடக்கும் போது ஒரு விபத்தில் சிக்கும் சனந்த், இமயாவின் காதல் உள்பட சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை மறக்கிறார்.
அதன் பிறகு என்ன ஆனது? யாருடைய காதல் வென்றது? என்பதே மீதி கதை. பார்த்து பழகிய ஒரு முக்கோண காதல் கதையை மீண்டும் தூசி தட்டி ஓல்டு ஒயின் இன் நியூ பாட்டில் என்பதைப் போல புதிய ஃபிளேவரில் இயக்குனர் கிஷோர் குமார் கொடுத்திருக்கிறார். இதுவரை சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த சனந்த், கதாநாயகனாக மாறி ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். முதல் படத்திலேயே காதல், நகைச்சுவை, கோபம், எமோஷனல் என நடிகை இமயா அசத்தல் நடிப்பை கொடுத்துள்ளார். தனது அனுபவ நடிப்பை மடோனா செபாஸ்டின் தந்துள்ளார். முகேஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ‘கலர்புல்’. ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் ‘யூத்புல்’.