அவரு அண்ணன்; நான் தம்பி: மதராசி விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்துள்ள படம் ‛மதராஸி’.செப்டம்பர் 5ல் ரிலீஸாகும் இப்படத்தின் பாடல் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சல்மான், உட்பட பல பெரிய ஹீரோவை வெச்சு படம் பண்ணியவர் முருகதாஸ். அந்த பட்டியலில் நானும் இணைந்தது சந்தோசம். விஜய் கூட நான் நடிச்சதுக்குப் பிறகு சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் பண்ணாங்க. எப்போதும் அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான். அவர் அப்படி நினைச்சி ருந்தால் எனக்கு துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார். நானும் அப்படி நினைச்சிருந்தால் அந்த துப்பாக்கி வாங்கியிருக்க மாட்டேன் என்றார்.