மகளுக்கு கிரியா என பெயர் சூட்டிய ஹரீஷ் கல்யாண்
பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து தற்போது பிரபல நடிகராக இருப்பவர் ஹரீஷ் கல்யாண். தற்போது வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தாஷமக்கான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தன் குழந்தைக்கு தமிழ் புத்தாண்டு அன்று பெயர் சூட்டு விழாவை நடத்தியுள்ளார். தன் செல்லமகளுக்கு ‘கிரியா ஹரீஷ்’ என பெயர் சூட்டி உள்ளார்.