‘ஹைக்கூ’ படத்தின் டப்பிங் பணி துவக்கம்
யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ’ஹைக்கூ’ . இந்த படத்தை விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் தயாரிப்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர்.இதில் பெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுத பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில்,படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார்.