ஜனநாயகன் பட வெற்றிக்கு எச் வினோத் பிரார்த்தனை
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 27-ந் தேதி மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் எச்.வினோத் மற்றும் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.இந்த நிலையில் மலேசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்துமலை முருகன் கோவிலுக்கு இயக்குனர் எச்.வினோத் நேற்று முன்தினம் நேரில் சென்று தரிசனம் செய்து சிறப்பு பூஜை நடத்தினார். அப்போது ஜனநாயகன் பட வெற்றிக்காக அவர் முருகனை மனமுருகி வேண்டியுள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.