துருவ நட்சத்திரத்தை தூசி தட்டும் கௌதம் மேனன்
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்துவர்மா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நிதி
சிக்கல்களால் தள்ளிப் போனது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கும் இந்த படத்தை வெளியிட கௌதம் மேனன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்.